06 கோடி ரூபா பெறுமதியான போதைப் மாத்திரைகளுடன் ஒருவர் கைது
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோத போதை மாத்திரிகளை கொண்டு சென்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் வழிகாட்டுதலின் கீழ் நேற்று (09) பொரளை ரேமன்ட் சந்தியிலுள்ள போக்குவரத்து சமிக்ஞையில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது 06 கோடி ரூபா சந்தைப் பெறுமதியான 5,99,000 பிரேகாப் என்ற போதைப் மாத்திரிகளுடன் மன்னார் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், மன்னார் பகுதியைச் சேர்ந்த சுஜி என்ற நபர் படகில் வந்து சிலாவத்துறை பாலத்திற்கு அருகில் போதை மாத்திரைகளை கொடுத்ததாகவும், அதனை கொழும்பு பகுதிக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.