தேர்தலில் பெரமுனவை வழிநடத்த வரமாட்டாராம் பசில் !

தேர்தலில் பெரமுனவை வழிநடத்த வரமாட்டாராம் பசில் !

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்துவதற்கு நாடு திருப்பமாட்டார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார்.

எனினும், பொதுத்தேர்தலில் கட்சியை வழிநடத்துவதற்கு அவர் இலங்கை திரும்புவார்
என மொட்டு கட்சி உறுப்பினர்கள் அறிவித்து வந்தனர்.

பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் அப்பணி முடிவடைகின்றது. ஆனாலும் பசில் ராஜபக்ஷ இன்னும் வரவில்லை.

இனியும் அவர் வரமாட்டார் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

பொதுத்தேர்தலை பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்ஷ வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )