அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
நேற்றைய நாளுடன் (16) ஒப்பிடுகையில், இன்றைய தினம் (17) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் (17) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 80 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (16), அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 31 சதமாகக் காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் (17) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 15 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (16), அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 03 சதமாகக் காணப்பட்டது.
CATEGORIES Business