மனோவுடன் இணைந்தார் பாரத் அருள்சாமி

மனோவுடன் இணைந்தார் பாரத் அருள்சாமி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப தலைவர் பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்று (08) கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராக பதவி வகித்த பாரத் அருள்சாமி, நேற்று முன்தினம் (07) அவரது பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடையச் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிடத் தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்கு அப்பால் தன்னால் செயல்பட இயலாது என்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மக்களின் நலனுக்காக கட்சி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர சில தனி நபர்களின் வளர்ச்சிக்காக மாத்திரம் முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதையும் நேற்றைய அவரது பதவி விலகல் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )