எதிர்வரும் திங்கள் முதல் உர மானியம் வழங்க நடவடிக்கை

எதிர்வரும் திங்கள் முதல் உர மானியம் வழங்க நடவடிக்கை

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு இதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )