விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி சகவீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவர்கள் சென்ற விண் கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 பேரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் தொடர்ந்து விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளனர். பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த விண்வெளி நிலையத்தில் தற்போது இருவரும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

அவர்களை அழைத்து வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளது.

இந்த விண்கலம் மூலம் வருகிற பெப்ரவரி மாதம் அவர்கள் பூமிக்கு திரும்ப இருக்கின்றனர். அதுவரை சுனிதா வில்லியமஸ் மற்றும் சகவீரர் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள்.

இதனால் அவர்களால் நவம்பர்மாதம் 5ம் திகதி நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நேரில் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் அவர் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்கும் முறை 1997-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )