தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதன் நன்மைகள்

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதன் நன்மைகள்

அரபு நாடுகளில் விளையும் பேரீச்சம் பழம் பல சத்துக்களைக் கொண்ட பழமாகும். இதில் பொதுவாக அதிக இரும்புச்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் மேலும் பல சத்துக்கள் உள்ளன. பேரீச்சம் பழத்தை தினம் தோறும் உட்கொள்வதால் பல விதமான பலன்களை அளிக்கிறது. மேலும் மருத்துவர்களும் இதனை தினம் தோறும் உட்கொள்ள பரிந்துரை செய்கின்றனர். பேரீச்சம் பழத்தை வைத்து பல இனிப்பு உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள முக்கிய சத்துக்களையும், இது அளிக்கும் பலன்களையும் இங்கு காணலாம். 

பேரீச்சை பழத்தில்  இரும்புச்சத்து உள்ளதாக கூறப்படுகிறது. வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம், முட்டி வீக்கம் நிவர்த்தி ஆகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பலப்படுத்தும். தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலு அடைந்து அதன் ஆரோக்கியம் மேம்படும். மேலும் தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும். 

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும். இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )