நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கையாகும் !

நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கையாகும் !

கிடைக்கப்பெற்ற வாக்குகள் எவ்வாறு இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதியின் ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியாகவே அமைய வேண்டும். ஏனைய கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும், பின்னடைவு ஏற்பட்டாலும், அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். ​​ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நாடு முன்னேற வேண்டும் என்ற படியால் நமது நாட்டுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையையே இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோது விடுத்தேன். தற்போதைக்கு கடனை அடைக்க முடியாத நிலையிலே இருக்கிறோம். எமது நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்கள் பன்முக சவால்களை எதிர்கொண்டுள்ளனர். நாட்டை கட்டியெழுப்பும் விடயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பாதுகாக்கப்படும் நிலைக்குச் செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற அதிகாரம் கிடைத்தவுடன் சிறந்த பயணத்தை மேற்கொள்ள முடியும். 2028 ஆம் ஆண்டளவில் கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுயுள்ளது. எனவே இதற்கு தயாராக வேண்டிய தேவையுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் வலுப்பெற்று பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். புதிய தொழில்முனைவோர்கள் உருவாக வேண்டும். இதற்கான சரியான தொலைநோக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான சரியான அணி ஐக்கிய மக்கள் சக்தியிலயே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் திருமதி ஹிருணிகா பிரேமசந்திர நேற்று (06) ஏற்பாடு செய்த கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )