சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு

சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த வருவாய் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கொண்டுள்ளது,

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் கிடைத்த 1.46 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 61.2% அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வாராந்த அறிக்கையின் படி  கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணக்கை 111,938  ஆகவும் இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் அது  122,140  ஆக அகதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )