பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணியில் 5000 பேர் !

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணியில் 5000 பேர் !

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்த உள்ளதாக பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த விடயத்தை பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் நான்காயிரம் பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலின் போது நீண்ட கால அடிப்படையிலான கண்காணிப்பாளர்களாக 200 பேர் வாகனங்களுடன் நியமிக்கப்பட உள்ளனர்.

பொதுத் தேர்தலின் போது விருப்பு வாக்குகளும் எண்ணப்படும் காரணத்தினால் வாக்கு எண்ணும் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் திட்டமிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )