உலகின் 2வது பணக்காரராக மார்க் ஜுக்கர்பெர்க்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்
இந்நிலையில், இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டொலருடன் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 206 பில்லியன் டொலர்களுடன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் 7 ஆவது பெரிய கோர்ப்ரேட்டாக இந்த நிறுவனம் உருவெடுத்து உள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் அப் ஆகியவற்றை கையகப்படுத்தியது.
ஏற்கனவே 2-ஆவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இம்முறை 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டொலர்கள். 4ஆவது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டொலர் ஆகும்.
5 முதல் 10-ஆவது இடம் வரை அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளனர்.