வல்லாரை கீரை பாயாசம்

வல்லாரை கீரை பாயாசம்

வல்லாரை கீரை என்பது முடி வளர்ச்சிக்கு சிறந்தது. மேலும் தோல் பொலிவுக்கு, கண்களுக்கு கீழ் ஏற்படும் சுருக்கம், முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் போன்றவற்றை போக்கும்.

அதுமட்டுமின்றி இரத்தத்தை சுத்தமாக்கும். உடலிலுள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தும். வாய்ப்புண், தொண்டைப் புண், வயிற்றுப் புண்களை ஆற்றும்.

இனி வல்லாரை பாயாசம் எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வல்லாரை கீரை – 100 கிராம்
  • பாதாம் – 5
  • பால் – 1 லீட்டர்
  • பச்சரிசி – ஒரு தேக்கரண்டி
  • வெல்லம் – 100 கிராம் தேங்காய் – அரை மூடி
  • ஏலக்காய் – 5

செய்முறை

முதலில் வல்லாரை கீரை, பச்சரிசி,தேங்காய் துருவல், பாதாம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின் பாலை அடுப்பில் காய்ச்சிக் கொள்ளவும்.

பின்னர் அடி கனமான பாத்திரமொன்றில் வெல்லத்தை போட்டு சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.

தொடர்ந்து அதில் அரைத்து வைத்துள்ள வல்லாரை கீரைக் கலவையை கலந்து மிதமான தீயில் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து சிறிது ஆறிய பின்னர் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

அருமையான வல்லாரை கீரை பாயாசம் தயார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )