தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு
களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் நானுஒயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்கு வளர்ச்சியடைந்துள்ள தேயிலை மரங்களை அழித்து அந்த இடத்தில் கோப்பி பயிர்செய்கையினை முன்னெடுப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த பகுதி தொழிலாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன்மூலம் குறித்த தோட்டத்தை கையகப்படுத்தும் சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
CATEGORIES Sri Lanka