தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும்
“பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமது கட்சியுடன் கூட்டணியமைக்க வேண்டுமென்றால் அதற்கு நிபந்தனையாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை விட ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் எஸ்.ஜே.பி.யில் இணைய வேண்டும்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “கட்சித் தலைவர் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க விரும்பும் ஒரு சிலர் சிறிகொத்தாவில் ஒரு சில கட்சி உறுப்பினர்களுடன் இருக்கட்டும், மற்றவர்கள் எங்களுடன் சேர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இப்போது சிறந்த இடம் எஸ்.ஜே.பி. அத்துடன் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி கட்சியை எங்களிடம் ஒப்படைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.
திரு.விக்கிரமசிங்கவிடம் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யுமாறு பலமுறை கூறியும் அவர் கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. விக்ரமசிங்க வெளியேறினால் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் அது எமக்கு வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.