சந்தீப் லமிச்சானே விடுதலை
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சந்தீப் லமிச்சானே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
படான் உயர்நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நேபாள மாவட்ட நீதிமன்றம் இவரை குற்றவாளி என்று அறிவித்து சிறைத் தண்டனை விதித்த நிலையில் தற்போது படான் உயர்நீதிமன்றம் சந்தீப் லமிச்சானேவை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கலாம் என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sports News