உங்கள் நாளை வெற்றிகரமாக்க சில குறிப்புகள்
சரியான யுக்திகள் மூலம் உங்களின் ஒரு நாளை வெற்றிகரமாக பயன்படுத்தி கொள்ள முடியும். அந்த வகையில் வெற்றிகரமாக உங்கள் நாளை திட்டமிட உதவும் சில குறிப்புகள்
1. சீக்கிரமாக எழுந்திருங்கள் வார இறுதி நாட்களை தவிர்த்து வேலை நாட்களில் இரவு சீக்கிரமே தூங்க சென்று அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, உங்கள் மீது கவனம் செலுத்தவும், மனதளவில் தயாராகவும், உற்சாக எண்ணங்களுடன் நாளை தொடங்கவும் போதுமான நேரத்தை வழங்குகிறது.
2. தினசரி இலக்குகளை குறித்து கொள்ளுங்கள்: குறிப்பிட்ட நாளில் நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் சுமார் 3 முதல் 5 குறிப்பிட்ட அல்லது முக்கிய இலக்குகளை ஒரு பேப்பரில் எழுதுங்கள். முக்கியமாக நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை முதன்மைப்படுத்தி எழுதுவது தெளிவான இலக்கை உருவாக்க உங்களுக்கு உதவுகிறது மற்றும் மிக முக்கியமான பணிகளை நீங்கள் மறந்து விடாமல் தொடர்ந்து செய்து அதனை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்கிறது.
3. உங்கள் அட்டவணை சரிபார்த்து கொள்ளுங்கள்: நாளின் துவக்கத்தில் அதாவது காலையில் நீங்கள் அன்றைக்கு செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை முதலில் சரி பார்க்கவும். இது அன்றைய நாளில் இருக்கும் பணிச்சுமைக்கு மனதளவில் தயாராக மற்றும் அவற்றை செய்து முடிப்பதில் முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் இருப்பின் அதை முன்கூட்டியே கண்டறிய இந்த பழக்கம் உதவுகிறது.
4. இலகுவான வேலைகளை முதலில் முடிக்கவும்: நாளின் துவக்கத்திலேயே உங்களுக்கு இருக்கும் சிறிய அல்லது எளிதான வேலையை உடனே செய்து முடிப்பது உங்களுக்கு ஒரு சாதனை உணர்வைத் தருகிறது மற்றும் சுறுசுறுப்பை உருவாக்குகிறது, நாள் முழுவதும் பெரிய வேலைகளைச் சமாளிக்க இது உங்களை ஊக்குவிக்கிறது.
5. உடற்பயிற்சி அல்லது தியானம்: தினசரி காலை எழுந்ததும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இல்லை என்றால் தியானத்தில் ஈடுபடுவது உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே காலை நேரங்களில் உடல் செயல்பாடுகள் அல்லது நினைவாற்றல் பயிற்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு ஆற்றல், கவனம் மற்றும் மனநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது பணிகளை எளிதில் முடிக்க மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.
6. காலையில் எழுந்ததும் முதலில் சோஷியல் மீடியாக்கள் அல்லது இ-மெயில்ஸ்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை குறைக்கவும். டிஜிட்டல் டிவைஸ்களில் உங்கள் கவனத்தை சிதறடிக்கும் முன், உங்கள் காலை வழக்கம் மற்றும் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். தெளிவு மற்றும் நோக்கத்துடன் உங்கள் நாளைத் தொடங்க இது உதவுகிறது