கோழி இறைச்சியின் விலை குறைவு
கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை நூறு ரூபாய் தொடக்கம் நூற்றைம்பது ரூபாய் வரை குறையலாம் எனவும் அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
அடுத்த பதினைந்து நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் என்றும் அவர் கூறினார்.
CATEGORIES Sri Lanka