இன்று முதல் 65 மணிநேர நீர்வெட்டு !

இன்று முதல் 65 மணிநேர நீர்வெட்டு !

இன்று நள்ளிரவு முதல் மூன்று நாட்களுக்கு கண்டியில் சில பிரதேசங்களில் நீர் வெட்டு
அமுல் படுத்தப்படுவதாக நீர் வழங்கள் மற்றும் நீர் வடிகாண் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நாளை மறுதினம் 29 ஆம்திகதி மாலை 6 மணி வரை 65 மணிநேரம் நீர் வெட்டு இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, அக்குரணை, குண்டசாலை பிரதேச செயளாலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள், ரஜவெல்ல, சிறிமல் வத்தை, அம்பிட்டிய, ஹந்தான, மடவல,கட்டுகாஸ்தோட்டை மற்றும் மாவத்தகம உட்பட பல பகுதிகளில் நீர் தடைப்படும்.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, கண்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என மகாவலி அதிகார சபையின்
பிரதான அணைகள் மற்றும் மகாவலி நீர்த்தேக்கப் பணிப்பாளர் டி.எம்.தர்மதாச தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெறும் பொல்கொல்ல, கண்டி மற்றும் ஹாரகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் விநியோகம் இடம் பெறாது எனவும் இதனால் நீர் பாவனையாளர்கள் தமக்குத் தேவையான தண்ணீரைச்சேகரிக்து வைத்துக்கொள்ளுமாறும் அவர் கூறினார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு நீர் திறந்துவிடப்படவுள்ளதாகவும் இதனால் பொல்கொல்ல நீர்த்தேக்கம் முழுமையாக காலி
செய்யப்படவுள்ளதாகவும் எம்.தர்மதாச தெரிவித்தார்.

எனவே, நீர்த்தேக்கத்தில் மீன்பிடிப்பதும் வண்டல் நிறைந்த நீர்த்தேக்கத்தில் இறங்குவதும் ஆபத்தானது என அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )