’96’ 2-ம் பாகத்தின் அப்டேட்

’96’ 2-ம் பாகத்தின் அப்டேட்

கடந்த 2018-ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ’96’ .

காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “மெய்யழகன்“ படத்தின் புரமோசன் நிகழ்ச்சியின் போது இயக்குனர் பிரேம்குமாரிடம் ’96’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ” 96 படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டு உருவானது. ஆனால் இதன் இரண்டாம் பாகம் காதல் இல்லாமல் குடும்ப பிரச்சினையை மையாக கொண்டு உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ‘மெய்யழகன்’ திரைப்படம் நாளை(27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுடன் இத்திரைப்படத்தில் நடிகர்கள் அரவிந்தசாமி மற்றும் கார்த்தி சேர்ந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )