ஹாலிவுட் நடிகர் ஜானிடெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஹாலிவுட் நடிகர் ஜானிடெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் ‘மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்’ படம் வெளியானது.

இந்த நிலையில் ஜானிடெப்புக்கு இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )