புதுடெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார் அதிஷி

புதுடெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார் அதிஷி

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் திகதி கைது செய்யப்பட்டார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலுக்கு கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரி பதவியை இராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, நேற்று முன் தினம் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி புதிய முதல் – மந்திரியாக அதிஷி பதவியேற்றார். இதில் அதிஷியுடன் 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்-மந்திரியாக பொறுப்பேற்றபின் பேசிய அதிஷி, ராம ராஜியத்தில் பாரதம் இருந்ததுபோல அடுத்த 4 மாதங்கள் டெல்லி மக்களுக்காக நான் பணியாற்றுவேன். அரசியல் கண்ணியத்திற்கு உதாரணமாக கெஜ்ரிவால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிப்ரவரி தேர்தலின்போது அரவிந்த் கெஜ்ரிவாலை மக்கள் மீண்டும் கொண்டுவருவார்கள் என நம்புகிறேன். அதுவரை முதல்-மந்திரி அலுவலகத்தில் அவரது இருக்கை இருக்கும்’ என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )