ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் 288 முறைப்பாடுகள்
ரஷ்யா மற்றும் யுக்ரைன் மோதலில் பங்கேற்பதற்காக இலங்கையர்களை அனுப்பும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த போரில் பங்கேற்பதற்காக சென்ற 16 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.