சூப்பரான சிக்கன் மோமோஸ்

சூப்பரான சிக்கன் மோமோஸ்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சிற்றுண்டி வகையில் மோமோஸ்ஸும் ஒன்று.

அந்த வகையில் சிக்கன் மோமொஸ் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மா தயாரிக்க

  • கோதுமை மா – 1 கப்
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி

ஸ்டப்பிங் செய்ய

  • சிக்கன் கீமா – 300 கிராம்
  • வெங்காயம், வெங்காயத் தாள் (நறுக்கியது) – அரை கப்
  • வெள்ளைப் பூண்டு – 3 பற்கள்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – ஒரு துண்டு
  • வெங்காயத்தாள் கீரை – 1/4 கப்
  • மிளகுத் தூள் – 1/2 கரண்டி
  • சோயா சோஸ் – 2 கரண்டி
  • வால் நட் – 1/4 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கோதுமை மாவில் உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி பரோட்டா மா பதத்துக்கு பிசைய வேண்டும்.

பின் அதில் எண்ணெய் விட்டு ஐந்து நிமிடங்களுக்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் வால்நட் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு, வெங்காயத்தாள்,வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலக்கவும்.

தொடர்ந்து, சிக்கன் கீமாவில் சோயா சோஸ், மிளகு, உப்பு, வால்நட் கலவை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

தயார் நிலையிலுள்ள மோமோஸ் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மா போல மெலிதாக தேய்த்துக் கொள்ளவும்.

மாவின் நடுவே சிக்கன் கலவையை வைத்து மாவின் முனைகளை மடித்துக் கொள்ளவும்.

இதனை 15 நிமிடங்கள் வரையில் இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டால், சூப்பரான சிக்கன் மோமோஸ் ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )