முனீஸ்வரனாக காட்சியாளிக்கும் முருகன்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே இராஜ முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தரிசனத்துக்காக கோயிலுக்கு வந்தவர்கள் இந்த சிலை முருகனா? முனீஸ்வரனா? எனவும் முக அமைப்பிலும் உடல் அமைப்பிலும் வேறுபாடு உள்ளது எனவும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த சிலை வடிவமைத்த சித்தையன் என்பவர் கருத்து தெரிவிக்கையில்,
“இதுவரையில் முருகன் சிலையை நான் எங்கும் வடிவமைத்தில்லை எனக்கு வடிவமைக்க தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சிலையை வடிவமைக்க இதுவரை 40 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தினர் சிலையை மறுசீரமைக்க கூறியதால் தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES India