பன்னீர் ஸ்டஃப்ட் பரோட்டா

பன்னீர் ஸ்டஃப்ட் பரோட்டா

பரோட்டா பிரியரா நீங்கள்? அப்போ அருமையான பன்னீர் ஸ்டஃப்ட்டு பரோட்டா எப்படி செய்வதென இதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்

  • கோதுமை மா – ஒரு கப்
  • பன்னீர் (துருவியது) – 450 கிராம்
  • மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
  • மசாலாத் தூள் – கால் தேக்கரண்டி
  • தனியாத் தூள் – ஒரு கரண்டி
  • சீரகத் தூள் – ஒரு கரண்டி
  • வெங்காயம் (நறுக்கியது) – 1
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 1
  • கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவை உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ள வேண்டும்.

இதனை ஒரு துணியால் மூடி அரை மணித்தியாலத்துக்கு அப்படியே விடவும்.

பின் ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், பச்சை மிளகாய்,வெங்காயம், சீரகத் தூள், மசாலாத் தூள், தனியா தூள், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும்.

பின் சப்பாத்தி மாவை உருட்டி எடுத்து தேய்த்துக்கொள்ள வேண்டும்.

அதன் நடுவில் செய்து வைத்துள்ள பன்னீர் கலவையை எடுத்து வைத்து மறுபடி மூடி உருட்டிக்கொள்ள வேண்டும்.

மீண்டும் அதனை சப்பாத்தியாக தேய்த்து எடுக்கவேண்டும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சப்பாத்திக்களை புரட்டிப் போட்டு எடுத்தால் சுவையான பன்னீர் ஸ்டஃப்ட் பரோட்டா ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )