ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும்.

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நாடு பூராகவுமுள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் ஆகஸ்ட் 22 ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )