இரவில் நகம் வெட்டுவது நல்லதல்ல

இரவில் நகம் வெட்டுவது நல்லதல்ல

காலம் காலமாக இரவில் நகங்களை வெட்டக்கூடாது என்று கூறப்படுகிறது.

ஆன்மீகத்தின்படி மாலை நேரங்களில்தான் லட்சுமி தேவி வீட்டுக்குள் நுழைந்து வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

லட்சுமி தேவிதான் வீட்டுக்கு செழிப்பையும் ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருவது.

மாலையில் வீட்டுக்குள் நுழையும் லட்சுமி தேவி அப்படியே தங்கி ஆசிர்வாதத்தை தருவதாக நம்பப்படுகிறது.

இதனால்தான் மாலை நேரங்களில் நகம் வெட்டக்கூடாது, குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது, தலைமுடியை அவிழ்த்தபடி இருக்கக்கூடாது எனக் கூறப்படுகிறது.

பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றுக்கு தலைமுடி, நகங்கள் போன்றவற்றைத் தான் பயன்படுத்துவார்களாம்.

எனவே மாலை நேரங்களில் நகங்களை வெட்டும்பொழுது அந்தத் துண்டுகள் கீழே விழும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் நமக்கெதிராக சூனியம் செய்யும் நபர்களோ அல்லது தீய சக்திகளோ அந்த நகங்களை சேகரித்து நமக்கு தீமையை உண்டுபண்ணலாம் என்பதால் இரவு நேரங்களில் இச் செயல்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் இரவு நேரங்களில்தான் கெட்ட சக்திகள் அதிகம் உலாவும். எனவே இரவு நேரங்களில் நகங்கள் சிதறிக் கிடந்தால் அந்த கெட்ட சக்திகளால் நாம் ஈர்க்கப்படலாம்.

சனிக்கிழமைகளில் நகம் வெட்டக் கூடாது. காரணம் சனிக்கிழமைகளில் நகம் வெட்டினால் மன உறுதி குறையும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நகம் வெட்டக் கூடாது.

திங்கட்கிழமை நகம் வெட்டினால் உடல் நலன் மேம்படும்.

செவ்வாய்க்கிழமை நகம் வெட்டினால் கடன் சுமை குறையும்.

புதன்கிழமை நகம் வெட்டினால் பூர்வீக சொத்து பெருகும்.

வியாழக்கிழமை நகம் வெட்டினால், கெட்ட விடயங்கள் நடக்காது.

வெள்ளிக்கிழமை நகம் வெட்டினால் அன்பானவர்களை சந்திப்பீர்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )