நாவில் எச்சில் ஊறவைக்கும் சேமியா கேசரி
சேமியாவையும் சரி கேசரியையும் சரி விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்.
மாலை நேரத்தை இனிமையானதாக மாற்றும் சேமியா கேசரி எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சேமியா – 500 கிராம்
- நெய் – தேவையான பொருட்கள்
- சீனி – 400 கிராம்
- முந்திரி – 2
- பாதாம் – 2
- குங்குமப் பூ – சிறிதளவு
- ஏலக்காய் – ஒரு கரண்டி
செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம் சேரத்து வறுக்க வேண்டும்.
அதனுடன் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேகவிட வேண்டும்.
சேமியா வெந்த பின் சீனி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் பாலில் குங்குமப் பூ சேர்த்து கலந்துவிட்டு சேமியா கேசரியில் சேர்க்க வேண்டும்.இதனை நன்றாக கிளறி இறக்கினால் அருமையான சேமியா கேசரி தயார்.