சமூக ஊடகங்களை கண்காணிக்க தயார் நிலையில் விசேட குழுவினர்

சமூக ஊடகங்களை கண்காணிக்க தயார் நிலையில் விசேட குழுவினர்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ள அமைதியான காலப்
பகுதியில், சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியூமி ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

ஐவர் கொண்ட குழு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, சமூகஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் அகற்றப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் ஆயுதங்களைவைத்திருப்பது, புகைத்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனைபோன்றவைதடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்கா சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )