இரத்த தானம் செய்வதால் மாரடைப்பு ஏற்படாதா ?
இரத்த தானம் செய்வது என்பது ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதோடு, தானம் செய்தவருக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
தொடர்ந்து இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்தக் கொதிப்பு குறைவதோடு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறைவு என ஆய்வுகள் கூறுகின்றன.
ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்து உங்கள் இரத்தத்தில் அதிகமாக இருந்தால், ரத்த தானம் செய்வதன் மூலம் இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து இலகுவாகவும் சீராகவும் இதயத்துக்கு குருதி சென்றடையும்.
மேலும் புது இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். இரத்த அடைப்புக் கட்டி, கை, கால் மரத்துப் போகுதல் போன்றவை ஏற்படாது.