தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் நிறைவு : விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று (18) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் கடந்த மாதம் 16 ஆம்
திகதி ஆரம்பமானது.
இதற்கமைய வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரத்திற்கு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டங்கள் அல்லது கூட்டங்களை நடத்த அல்லது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்று (18) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார நடவடிகைகளில் ஈடுபடுவோருக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதம் மற்றும் ஒரு மாதத்திற்கு குறையாத சிறை அல்லது
இரண்டும் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட
அதிகாரி தெரிவித்துள்ளார்.
TAGS 2024 Sri Lanka electionselectionelection campaignElection CommissionElection Commission of Sri lankaHot NewsSri lanka