அரேபியன் ஸ்டைல் சூப்பர் டிஷ்

அரேபியன் ஸ்டைல் சூப்பர் டிஷ்

எப்பொழுதும் ஒரே மாதிரியான தின்பண்டங்களை சாப்பிட்டு சலித்துவிட்டதா? இப்போ அரேபியன் ஸ்டைல் குனாஃபா செய்து சாப்பிடுங்கள். சூப்பரா இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • சேமியா – 200 கிராம்
  • பட்டர் – அரை கப்
  • சீனி – கால் கப்
  • பால் – கால் கப்
  • க்ரீம் – கால் கப்
  • பாதாம் தூள் – கால் கப்
  • ரோஸ் வோட்டர் – கால் தேக்கரண்டி
  • சோள மா – இரண்டு கரண்டி
  • மொய்சரல்லா சீஸ் – ஒரு கப்
  • பிஸ்தா பருப்பு தூள் – இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சேமியாவை நொறுக்கி போடவும்.

அதனுடன் பட்டரை உருக்கி ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

இதனை கேக் மோட் ஒன்றில் பாதியளவு மட்டும் போட்டு தட்டையாக பரப்பிக் கொள்ளவும்.

பின்னர் இன்னொரு பாத்திரத்தில் பால், க்ரீம், சீனி, சோள மா ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும்.

இக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி இளம் சூடான தீயில் வைத்து காய்ச்சிக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை அடுப்பில் வைத்து மொய்சரல்லா சீஸ், ரோஸ் வோட்டர் சேர்த்து நன்கு காய்ச்சிக்கொள்ள வேண்டும்.

காய்ச்சிய இக் கலவையை ஏற்கனவே செய்து வைத்துள்ள சேமியா கலவையின் நடுவில் ஊற்ற வேண்டும்.

மீதமிருக்கும் சேமியாவை அதன்மேல் மூடினாற்போல பரப்பி வைக்க வேண்டும்.

இதனை 10 நிமிடங்கள் வரையில் ஃப்ரீ ஹீட் செய்த ஓவனில் 40 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சீனி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசுபிசுப்பு தன்மை வரும் வரையில் காய்ச்சி, இப் பாகினை ஏற்கனவே செய்து வைத்துள்ள குனாஃபாவின் மீது ஊற்ற வேண்டும்.

பின் அதன் மேல் பாதாம், பிஸ்தா போன்றவற்றை மேலே தூவவும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )