வடக்கு மக்களின் பிரச்னைகளை பற்றி பிரதான வேட்பாளர்கள் பேசுவதில்லை

வடக்கு மக்களின் பிரச்னைகளை பற்றி பிரதான வேட்பாளர்கள் பேசுவதில்லை

வடக்கு மக்களின் பிரச்னைகள் பற்றி பிரதான வேட்பாளர்கள் பேசுவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

புத்தூர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து கூறுகின்றார் தெற்கில் உள்ள மக்கள் அனைவரும் தன்னை வெற்றி பெற வைக்க தயாராக உள்ளனர் என்று. யாழ்ப்பாண மக்களும் வெற்றிக்கான மாற்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு தொனியில் கூறிவிட்டு சென்றிருக்கின்றார். வரலாற்றைப் போலவே வடக்கில் உள்ள மக்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள்.

தெற்கில் எடுத்த முடிவுக ளில் வடக்கு மக்களும் ஒத்து செல்ல வேண்டும் என அவர் கூறிவிட்டு சென்றிருக்கின்றார். இவர்கள் வடக்கு மக்களின் பிரச்னைகள் பற்றி பேசுவதில்லை. 21 ஆம் திததி அந்த புள்ளடியினை பெறுவதற்கு மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு வந்து போகின்றார்கள்.

இந்த மூன்று வேட்பாளர்களையும் நீங்கள் எடுத்துக் கொண்டால், வரலாற்றுக் காலத்தில் செய்ததைத்தான் இந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் செய்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் வடக் கிலுள்ள மக்களுக்கு முன்னால் நாங்கள் கூறிக்கொள்வது என்ன வென்றால் இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், மக்களுடைய பிரச்சினைகளை நாங்கள் இந்த சூழ்நிலையில் தான் தெரிவிக்க வேண்டும்.

பல தசாப்தங்களாக, தெற்கி லும் வடக்கிலும் போராடிய ஒவ்வொரு தோழர்களும், ஒன்றிணைந்து உருவாக்கிய வேலைத்திட்டத்தினோடு, நாங்கள் உங்கள் மத்தியில் வந்துள்ளோம்.

அந்த வகையில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை வகுப்புகள், தேசிய இன பிரச்சனைக்கான தீர்வு ஒன்றினை, கண்ணியமான நியாயமான நீதியான ஒரு வாழ்க்கை முறையினை வாழ்வதற்கான ஒரு தீர்வு திட்டம். வரலாற்றுக்காலமும், நீங்கள் அளித்த வாக்குகளை விடுத்து ஒரு கொள்கை திட்டத்திற்கான எங்களுடன் பயணியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )