பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக 2 புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இது தொடர்பான சட்டமூலங்களை தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் 30 சதவீதத்துக்குக் குறையாமல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை சேர்க்கும் வகையில், பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 22 அரசியலமைப்புத் திருத்தமாக, ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியலில் 50 வீதத்துக்குக் குறையாத பெண் உறுப்பினர்களை உள்ளடக்கும் சட்டமூலமாக பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு நல்ல பதில் கிடைக்காத காரணத்தினால் உரிய கோரிக்கையை சட்டமாக கொண்டு வர தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )