தேர்தலை சுதந்திரமாக, நீதியாக நம்பகத்தன்மையுடன் நடத்த தயார் !
தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நம்பகத்தன்மையுடனும் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பான சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள், பணிப்புரைகளை வெளியிட்டுள்ளதோடு,
அது குறித்து பொதுமக்களையும் வெகுஜன ஊடகங்கள் ஊடாக அறிவுறுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எனினும், தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு புறம்பாக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் தேர்தல் செயன் முறை தொடர்பாக, முக்கியமாக வாக்கு அடையாளமிடப்படும் விதம், வாக்குகளையும் விருப்புகளையும் எண்ணும் விதம்,
தேர்தல் சட்டங்களை வலுவாக்கம் செய்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் சார்ந்த பணிகள் குறித்து தெரிவிக்கும் கூற்றுகளும் அபிப்பிராயங்களும் ஊடகங்கள் வாயிலாக
பிரசாரம் செய்யப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவித்தல் அல்லவெனவும் அவ்வாறான கூற்றுகள் எவையும் செல்லுபடியற்றவை எனவும் அவை தொடர்பான பொறுப்பு தமது ஆணைக்குழுவுக்கு இல்லை எனவும் தேர்தல்
ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தேர்தல் தொடர்பிலான அனைத்து விடயங்கள்மற்றும் பணிகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிடுவதனால், வேறு நபர்களோ அமைப்புகளோ வெளியிடும் கருத்துக்களையும் அறிவுறுத்தல்
களையும் பொருட்ட்படுத்த வேண்டாமென பொதுமக்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.