ரஷ்யா உடனான நட்பு பலப்படுத்தப்படும்

ரஷ்யா உடனான நட்பு பலப்படுத்தப்படும்

ரஷ்யா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஷெர்ஜி ஷோய்கு. தற்போது அந்த நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக உள்ளார். இவர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்ற போது வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் இருதரப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரஷ்யா இராணுவம் சுமார் 2½ ஆண்டுகளாக உக்ரேன் உடன் போர் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா இராணுவத்திடம் ஆயுதங்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ரஷ்யா இராணுவம், நட்பு நாடுகளிடம் ஆயுதங்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை அரங்கேறியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷ்யா உடனான நட்பு மேலும் பலப்படுத்தப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )