இலவங்கப்பட்டை கேக்
சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இலவங்கப்பட்டை கேக் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மா – 2 கப்
- இலவங்கப் பட்டை தூள் – ஒரு மேசைக்கரண்டி
- பட்டர் – ஒரு கப்
- பேக்கிங் பவுடர் – ஒரு மேசைக்கரண்டி
- பால் – 5 கப்
- முட்டை – 3
- சீனி – ஒரு கப்
- வெனிலா எசன்ஸ் – இரண்டு தேக்கரண்டி
- உப்பு – கால் தேக்கரண்டி
சிரப் செய்ய
- இலவங்கப் பட்டை தூள் – கால் தேக்கரண்டி
- பட்டர் – ஆறு மேசைக்கரண்டி
- வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
- சீனி – ஒரு கப்
- தண்ணீர் – 4 கப்
செய்முறை
மைக்ரோவேவ் ஓவனை 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரீஹீட் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, இலவங்கப்பட்டை தூள், பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சலித்து வைத்துக்கொள்ளவும்.
பின் அக் கலவையில் பால் ஊற்றி கட்டிகள் எதுவும் இல்லாமல் அடித்து கலக்க வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் பட்டர், வெனிலா எசன்ஸ், சீனி ஆகியவற்றைப் போட்டு க்ரீம் பதம் வரும் வரை அடித்துக்கெள்ள வேண்டும்.
தொடர்ந்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மீண்டும் அடித்துக் கொள்ளவும்.
பின் இரண்டு கலவைகளையும் ஒன்றாக சேர்த்து அடித்து கலக்கிக் கொள்ளவும்.
அதனை ஒரு தட்டில் ஊற்றி 40 நிமிடங்கள் வரை வேகவிட்டு, வெந்ததும் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இலவங்கப்பட்டை தூள், சீனி, பட்டர், வெனிலா எசன்ஸ், தண்ணீர் ஆகியவற்றைப் போட்டு குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.
சீனி முழுவதும் கரைந்ததும் கலவை கெட்டியாகத் தொடங்கும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி கேக்கின் மீது இந்த சிரப்பை ஊற்ற வேண்டும்.
அருமையான இலவங்கப்பட்டை கேக் தயார்.