குறைவான தீமையை தேர்வு செய்யுங்கள்

குறைவான தீமையை தேர்வு செய்யுங்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக போப் பிரான்சிஸ் செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் கூறியதாவது:-

அமெரிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு தீமைகளில் குறைவானவர் யார்? அந்த பெண்மணி அல்லது ஜென்டில்மேன் எனக்கு தெரியாது.

அமெரிக்கர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து வாக்களிக்க செல்வதற்கு முன் அந்த முடிவை எடுக்க வேண்டும் வாக்களிக்காதது நல்லது அல்ல. கருக்கலைப்பு ஒரு மனிதனைக் கொல்கிறது. கருக்கலைப்புக்கு எந்த காரணமும் இருக்க முடியாது . இது ஒரு படுகொலை இந்த விஷயங்களைப் பற்றி நாம் தெளிவாகப் பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )