சத்தும் சுவையும் நிரம்பிய பசலைக்கீரை காளான் குழம்பு

சத்தும் சுவையும் நிரம்பிய பசலைக்கீரை காளான் குழம்பு

சைவ உணவுகளில் காளான்கள் மிகவும் சுவை நிறைந்ததோடு, சத்துக்களும் அதிகம்.

அத்தகைய காளானுடன் பசலைக் கீரையைச் சேர்த்து குழம்பு வைத்தால் எப்படியிருக்கும்.

பசலைக்கீரை காளான் குழம்பு எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பட்டன் காளான் – 15
  • மல்லித் தூள் – ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • மசாலாத் தூள் – அரை தேக்கரண்டி
  • வெங்காயம் (வெட்டியது) – 1
  • எலுமிச்சைச் சாறு – ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
  • தண்ணீர் – அரை கப்
  • உப்பு – தேவையான அளவு

அரைக்க

  • பசலைக் கீரை – ஒரு கட்டு
  • அன்னாசிப்பூ – 1
  • பட்டை – 1
  • ஏலக்காய் – 4
  • கிராம்பு – 4
  • கொத்தமல்லி (வெட்டியது) – அரை கப்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை

காளானை நன்றாகக் கழுவி சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் விடாமல் பேஸ்ட்போல் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.

பின்னர் வெட்டி வைத்துள்ள காளானை அதில் சேர்த்து 6 நிமிடத்துக்கு வதக்க வேண்டும்.

தொடர்ந்து பசலைக் கீரை பேஸ்ட்டைப் போட்டு நன்றாக கிளறி விடவும்.

பின், மசாலாத் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கி பின் தண்ணீர் ஊற்றவும்.

இதனை மூடி, 8 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட வேண்டும்.

காளான் வெந்ததும் அதில் எலுமிச்சை சாற்றை சேர்த்து கிளறி இறக்கினால் சத்தும் சுவையும் மிகுந்த பசலைக்கீரை காளான் குழம்பு தயார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )