நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு எமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மஹியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொருளாதாரம் வரம்பில் சிக்கியுள்ளது. ஏன் இவர்களுக்கு மட்டும் இலஞ்சம் வாங்கும் அளவிற்கும் மட்டுமே பொருளாதாரம் ? நாம் இதை விட பொருளாதாரத்தை பெரிதாக்குவோம்.
தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் செயல்படும் ஒரு சிறந்த சமூகம், ஒரு சிறந்த கல்வி மாற்றம். அதுதான் நாடு… அப்படி ஒரு நாடு வேண்டாமா? அதைத்தான் நாங்கள் வழிநடத்துகிறோம்.
ரணில் விக்கிரமசிங்க எப்போதும் கேலி செய்கிறார். யோசியுங்கள்… 4,5,6 தபால் ஓட்டு. மூன்றாம் திகதி கூறுகின்றனர் சம்பளம் உயர்த்தப்படும் என்று. இது கேலிக்கூத்து இல்லையா? யபஹுவே சென்று செப்டம்பரில் வெற்றி பெற்ற பின் உரம் இலவசமாக வழங்குவோம் என்கின்றனர். இப்போது சிறுபோகமும் முடிந்துள்ள நேரத்தில் நாங்கள் நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்ப தயார்” என தெரிவித்துள்ளார்.