மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் நியமனம்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்
இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (10) கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.