வேலுகுமாருக்கு புதிய பெயர் சூட்டிய ஜனாதிபதி
கண்டி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிப்பதற்கு முடிவெடுத்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் துணிச்சலான செயற்பாட்டை பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரின் ஆதரவு திருப்பு முனையாக அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ‘சொல்லை’விட ‘செயலு’க்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலுகுமார் எம்.பிக்கு எக்சன் மேன் எனவும் அவர் பெயர் சூட்டினார்.