அறிவிப்பின்றி 05 நாட்களுக்குள் கடமைக்கு சமுகமளிக்காவிடின் சேவையை விட்டு விலகவேண்டும் !

அறிவிப்பின்றி 05 நாட்களுக்குள் கடமைக்கு சமுகமளிக்காவிடின் சேவையை விட்டு விலகவேண்டும் !

அரசாங்க அதிகாரிகள் அறிவிப்பின்றி 05 நாட்களுக்கு மேல் கடமைக்கு சமுகமளிக்காவிடின்,அடுத்த 05 நாட்களுக்குள் அவர்கள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை அறிவிக்க வேண்டுமென அரசாங்க சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கையொன்றினூடாக அரசாங்க சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி கடமைக்கு சமூகமளிக்காதமையினாலும், சில சந்தர்ப்பங்களில் சேவையிலிருந்து விலகியதை அறிவிப்பதற்கு ஒரு வருடத்திற்கும்
அதிகமான காலம் எடுத்துக்கொள்வதனாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகாரி ஒருவரது பதவி தொடர்பான இராஜினாமா அறிவிப்பு வெளியிடப்பட்டதன் பின்னர், அதுகுறித்து தவறு மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம் வழங்கப்படுமாயின், அது அரச சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் பிரிவு 216 இன் கீழ் சமர்ப்பிக்கப்படவேண்டும், மேலும், சுய விருப்பத்துக்கமைய
சமர்ப்பிக்கப்படும் விடயங்கள் முன்வைப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட ஒழுக்க நடைமுறை குறித்தும் விசாரணை அதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் எனவும் அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )