காசாவில் அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு ; 40 பேர் பலி
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந் நிலையில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனுஸ் நகர் அருகே அல்-மவாசி பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாமில் இஸ்ரேல் இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 40 பேர் பலியாகியுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
மனிதாபிமான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மனிதாபிமான பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாகவும் அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
CATEGORIES World News