வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நேற்று (09) 1800UTC இல் 21.4N மற்றும் 84.5Eக்கு அருகில் நிலைகொண்டது.
இதற்கிடையில், 16N – 20N மற்றும் 82E – 90E வரையிலான கடற்பகுதிகளில் 70-75 kmph வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், அதிக மழை மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு கீழே உள்ள வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு கடற்படை மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
CATEGORIES Sri Lanka