ஞாபக மறதி அதிகரித்துவிட்டதா ?
முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினருக்கும் ஞாபக மறதி பெரும் பிரச்சினையாக உள்ளது.
சற்று முன் ஒரு இடத்தில் வைத்த பொருளை எங்கே வைத்தோமென்று தேடுவோம். இது நாளடைவில் பெரும் பிரச்சினையாக மாறும்.
இந்த ஞாபக மறதிப் பிரச்சினையை சில எளிய நடைமுறைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
- தினமும் பத்து நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் ஞாபக மறதி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக, இதன் மூலம் நினைவுத் திறன் மற்றும் மன நிலையை மேம்படுத்த முடியும்.
- இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் யோகாசனங்களைச் செய்யலாம். இரத்த ஓட்டம் அதிகரித்தால் மூளை சிறப்பாக செயல்படும்.
- நினைவாற்றலை அதிகரிக்கும் புரொக்கோலி, பூசணி விதைகள், மீன், வல்லாரை கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- அனைத்து வேலைகளுக்கும் வலது கையைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக இடது கையைப் பயன்படுத்தலாம். அதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.