சந்திரனை கேட்டால் கூட கொண்டு வந்து தருவேன் என்பவர் தான் சஜித் !
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம், இமயமலையைக் கேட்டால்கூட, நிச்
சயம் கொண்டுவந்து தருவேன் எனக் கூறுவார். ஆனால் அதற்கான வழி என்னவென்பது அவருக்கு தெரியாது. சஜித் என்பவரின் வேலைத்திட்டம் இப்படிதான். மேடை பேச்சுக்கு வேண்டுமானால் அழகானதாக இருக்கலாம். ஆனால் நடைமுறைசாத்தியமற்றது.என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
‘ஜனாதிபதி சஜித் பிரேமதாசவின் பொருளாதார வேலைத்திட்டமானது நிலாச்சோறு ஊட்டும் கதைபோல்தான் உள்ளது.
சஜித் நல்லவர், பரந்த மனம் உள்ளவர். நிறைய செய்ய வேண்டும் என கனவு காண்பவர். கனவு காண்பது நல்ல விடயம்தான்.
சஜித்திடம் சென்று, சந்திரனை கொண்டுவந்து தாருங்கள் எனக் கேட்டால் அதையும்
செய்வதாக அவர் உறுதியளிப்பார்.
சூரியனைக் கேட்டால் அதையும் கொண்டுவந்து தருவதாக கூறுவார். ஏன்! இமயம
லையைக் கேட்டால்கூட அதனை கொண்டுவந்து காட்டுவேன் என்பார்.
ஆனால் எவ்வாறு கொண்டுவருவது என்பது அவருக்கு தெரியாது.
இவ்வாறுதான் சஜித்திடம் உரிய வேலைத்திட்டமோ, வழிகாட்டல்களோ இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் இந்நாட்டை ஆளக்கூடியவர் குறைந்தபட்சம் நிதி அமைச்சராகவாவது இருந்திருக்க வேண்டும்.
சஜித் இவ்வாறு பதவி வகிக்கவில்லை. எனவே, அவரிடம் நாட்டை ஒப்படைத்தால் மீண்டும் வரிசை யுகம் வருவது உறுதி’ என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.