இறந்தவர்களின் பொருட்கள் வீட்டில் இருக்கிறதா ?
என்னதான் நமது உறவினர்களாக இருந்தாலும் இறந்துவிட்டால் அவர்கள் ஆன்மாவாக மாறிவிடுவார்கள்.
அந்த வகையில் ஒருவர் இறந்துவிட்டால் 13 நாட்கள் வரையில் அவ் வீட்டில் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களால் அவர்கள் படிப்படியாக விண்ணுலகம் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில பொருட்களை அவர்களின் குடும்பத்தினர் பத்திரப்படுத்தி வைத்திருப்பர்.
அவற்றுள் நான்கு பொருட்களை மட்டும் வைத்திருக்கவே கூடாது.
அவ்வாறு வைத்திருந்தால் அது பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாகிவிடும்.
இறந்தவர்களின் பொருட்களை எரிக்கவோ அல்லது நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.
இறந்தவர்களின் உடைகளை பிறர் அணியக் கூடாது. அதேபோல் அவர்களது ஆபரணங்களையும் அணியக் கூடாது.
காலணிகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை பயன்படுத்தவே கூடாது.
தங்கமாக இருந்தால் அவற்றை கடையில் கொடுத்து உருக்கி, வேறு நகையாக மாற்றி பயன்படுத்தலாம்.
இறந்தவர்கள் படுத்திருந்த பாய், தலையணை, கட்டில் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவே கூடாது.
அப்படி இவற்றை வைத்திருந்தால் தீய சக்திகளின் தாக்கம் அதிகமாகும்