சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி
சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஓகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.