ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் ஆரம்பம்
March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் தற்போது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.